[...] “நான் ஒன்றை முன்மொழியப் போகிறேன்.” எனது தோழி ஏப்ரல் தனது இரகசியங்கள் எதுவும் நல்லதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னிடம் கூறுவதற்கு என்னை நோக்கி சாய்வாளே, அதைப்போல அது என்னை நோக்கி சாய்ந்தது. “நான் இங்கே இருப்பதை நீ யாரிடமும் சொல்லாவிட்டால் உன்னுடைய கண்களை என்னால் சரிபடுத்த முடியும்”
“இடத்தை விட்டு வெளியேறு!”
அது இருமுறை கண்களைச் சிமிட்டியது. “நானும் அதை தானே செய்ய முயற்சித்து வருகிறேன்.”
“நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், உன்னால் அதை செய்ய முடியாது!”
“ஏன் முடியாது?”
“ஏனென்றால் மூக்குக் கண்ணாடி அணிவதைத் தவிர எனது கண்களை வேறு யாராலும் சரிபடுத்த முடியவில்லை.”
“என்னிடம் சில குறிப்பிட்ட திறமைகள் உள்ளன. நீ பார்க்கத்தான் போகிறாய், ஆனால்…”
“…உன்னைப் பற்றி நான் யாரிடமும் சொல்லக்கூடாது அவ்வளவு தானே?”
“முக்கியமாக சொல்ல வந்ததே அதை தான், அதுதான் மையம்.”
“நீ என்னை குருடாக்கி விடமாட்டாய் என்பது எனக்கு எப்படி தெரியும்? தொலைபேசியில் பொருள் விற்கும் டெலிமார்க்கெட்டர்கள் சிலர் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விட்டுக்கொண்டிருப்பதைப் போல நீயும் இருக்கலாம் அல்லவா.”
அது தொடர்ந்து விட்டு விட்டு பேசிக்கொண்டே போனது. “எனக்கு எந்தவொரு தீங்கும் செய்யாத ஓர் உயிருக்கு நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.”
“அதாவது நான் உனக்கு தீங்கு செய்திருந்தால், உன்னால் என்னை குருடாக்கி விட முடியும் அதானே?”
“அதை தேவைக்கேற்பதான் சொல்ல முடியும்.”
“நீ எனது கண்களை சரிசெய்வதோடு, நான் உன்னைப்பற்றி யாரிடமும் சொல்லாவிட்டால், நீ எங்களது வயல்களை விட்டுப் போய்விடுவாயா?”
”முக்கியமாக சொல்ல வந்ததே அதை தான்!” [...]