Source text in English | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Winning entries could not be determined in this language pair.There were 10 entries submitted in this pair during the submission phase. Not enough votes were submitted by peers for a winning entry to be determined.Competition in this pair is now closed. |
ஆரம்பம் மிகப்பல ஆண்டுகள் முன்னே ஒருநொடி பாலகன் நானொரு மனிதன் ஆனேன்; உடனடி எந்தன் வாழ்வும் உதயம்! உலகே என்முன் விரிந்து படர்ந்தது! நெற்றியின் வியர்வை நிலத்தில் வீழ்ந்திட உழவன் ஒருவன் குதிரையில் ஏறிக் கழனியை நீங்கி, கணவாய் நுழைந்து, ஏரின் நுனியை மழுங்கச் செய்யும் தரிசாய் மாறிய மலையை உழுதிடக் கருத்துடன் அங்கே காத்தே நிற்கிறான்! பெருத்த ஓசையைக் கிளப்பிடும் இடிகள்; கருத்த முகடோ கண்ணுக்கு எதிரே! பொறுத்தே உள்ளான் மேற்படி உழவன் கருத்தில் உறுதி இருந்தால், உழட்டும்! | Entry #30247 — Discuss
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொடக்கம் அனைத்தும் ஒரு கணத்தில், ஆண்டுகளுக்கு முன், பையன்ஆன நான் இன்று மனிதன்: திடீரென்று தொடங்கியது என் வாழ்க்கை ! கண் முன்னே உலகம் -- குதிரை மேல் வியர்வை தெப்பலில் மலைச் சரிவில் உழவன். பள்ளத் தாக்கின் ஆற்றுப்படுகையை விடுத்து உழவு செய்ய ஒரு மலைப்பகுதி, உழைப்பை மழுங்கடிக்க தரிசு பாறை, காற்றில் மிதக்கும் இடி முழக்கம், உச்சியில் கரிய மலை முகடு, காத்திருக்கும் வெறுமை.... தைரியம் இருந்தால் --அவன் அதை உழட்டும் ! | Entry #29209 — Discuss
|
ஆரம்பம் பல ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்தும் ஒரு கணத்தில், சிறுவனாக இருந்த நான் ஒரு ஆணாக மாறியிருந்தேன்: எதிர்பாராமல் என்னுடைய வாழ்க்கை ஆரம்பித்தது! எனக்கு முன்னான உலகைப் பார்த்தேன்- எனவே முதல் மலையின் மேல் பகுதியில் அவனுடைய குதிரைகளின் மீது அந்த உழவன் வியர்த்து நிற்கின்றான், ஆற்றங்கரைகளை விட்டு வெளியேறிய பிறகு, கீழே உள்ள பள்ளத்தாக்குகளில் உழுத பிறகு, உழுவதற்கு ஒரு மலைப்பகுதியைக் காண்கிறான், அவனது பங்கை மழுங்கலாக்குவதற்கான தரிசு பாறை, காற்றில் தொங்கும் இடி, மற்றும் அவனுக்கு மேலே வெறுமையான கரு உச்சி, இப்பொழுது காத்துக்கொண்டிருக்கிறது, அவனுக்கு துணிச்சல் இருந்தால் இதை உழுது விடட்டும். | Entry #30529 — Discuss
|
துவக்கம் எல்லாம் ஒரு நொடியில், பல ஆண்டுகள் முன் பையனாயிருந்த நான் பெரியவன் ஆனேன்: சட்டென்று துவங்கியது என் வாழ்க்கை! கண்டேன் கண் முன்னிருந்த என் உலகை - எனவே குதிரை மீதிருந்து கலப்பை செலுத்தியவன் வியர்த்து நிற்கிறான் முதல் மலை உச்சியில் ஆற்றுப் படுகைகளை விட்டு வந்து கீழுள்ள பள்ளத்தாக்குகளை உழுத பின் உழ வேண்டிய மலைப்புறத்தைக் காண்கிறான் தன் கருவியை மழுங்க வைக்கும் வெற்றுப் பாறையை காற்றில் மிதந்து வரும் இடியோசை தலைக்கு மேல் வீற்றிருக்கும் கரும்பாறை தனியே காத்திருக்கிறது இப்போது. -உழட்டும் அவன், துணிவிருந்தால் | Entry #29129 — Discuss
|
துவக்கம் பல காலம் முன்பு, கண நேரத்தில், என்னுள் இருந்த சிறுவன் ஆண் ஆனான். திடீரென, என் வாழ்வு முகிழ்த்தது! உலகம் என் முன்னே புதிதாய் விரிந்தது – மலையின் புருவத்தில் உழுபவன் தன் குதிரைகளுடன் வியர்வை சொட்ட நிற்கிறான் ஆறு சூழ் நிலங்களை கை விட்டு, நீர் வழிப் பாதை கால் விட்டு. ஒரு மலையை உடைக்க வேணும், காத்திருக்கு பாறை அவனை உடைக்க வானம் காத்திருக்கு இடியை இறக்க வெறுமையில் கருத்த சிகரம் உயரே கண்ணில் கவிந்திருக்க. --துணிந்தால் அவன் உழட்டும். | Entry #30485 — Discuss
|
இதுதான் ஆரம்பம் சில வருட முன்பு, திடீரென, சிறுவனே நான் ஆணாக மாறினேன்: புதியதாய் என் வாழ்க்கை ஆரம்பித்தது! புதிய உலகம் என் முன்னே-- அதுவா குதிரையைக் கொண்டு உழுபவன் அவனே மலை முகட்டின் வியர்வைத் துளிகள் ஆற்றுப் படுகையை விட்டு விட்டு பள்ளத்தாக்கில் புதைந்தது, மலை முகடை உழுவதைப் பார்த்து கடும்பாறை அவன் பங்கை மழுக்கியது, காற்றில் இடிகள் காத்திருக்க, அவன் மேலே கரும் மேகம் வெறுமனே பூத்திருக்க, காத்திருத்தல் நன்றே. --துணிவிருந்தால் அவன் உழுவட்டும்! | Entry #29123 — Discuss
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முளைப்பு திடுமென ஒரு கணத்தில், ஆண்டுகள் சிலவற்றுக்கு முன்னே, சிறுவனான நான் முழு மனிதனாக மாறிப் போனேன்: திடீரென என் வாழ்வைத் தொடங்கினேன்! முன்னே உலகைக் கண்டேன் - அங்கே குதிரைக்கட்டி ஏர் உழுபவன், தன் குதிரைகளுக்கு அருகே நிற்கக் கண்டேன், தன் முதல் குன்றின் உச்சியின் வளைவிலேயே வியர்வை கசிய நின்றிருந்தான். ஆற்றுப்படுகைகளை விட்டு விலகி வந்து விட்டான், கீழிருக்கும் பள்ளத்தாக்கின் குறு மடிப்புகளில் ஆழ்ந்து நின்றுக்கொண்டு, உழுவதற்கான ஒரு மலைச்சரிவைக் காண்கிறான், வெற்று பாறைகள் அவனது ஏர்முனையை மழுங்கடிக்கவும் இடியோசை காற்றில் பற்றியிருக்கவும், நெடிந்துயரும் கருஞ்சிகரம் வெறுமையாய் மேலே நின்றிருக்கவும், இப்போது காத்திருக்கின்றான் அவன். -நெஞ்சில் துணிவிருந்தால் உழுதுபார்க்கட்டும்! | Entry #30074 — Discuss
|
தொடங்குதல் எல்லாம் ஒரு நொடியில்,ஆண்டுகளுக்கு முன், பய்யன் ஆகிய நான் ஆண் ஆனேன்: திடீரென என் வாழ்கை ஆரம்பித்தது! நான் உலகத்தை என் முன்னால் கண்டேன் -எனவே அந்த உழவனும் அவனுடைய குதிரைகளும் நின்றன முதலாம் குன்றின் புருவின் மீது வியர்வை சிந்தினான், ஆற்று நிலமே மிச்சம் இருந்தது மலட்டு பாரையே மழுப்பலே அவனது பங்கு, இடி, காற்றில் தொங்கிகொண்டிருந்தன, மற்றும் அந்த கருமையான சிகரம் அவனுக்கு மேல் ,உடயற்றது, இப்போது காத்திருக்கிறது. -தைரியம் இருந்தால் அவன் உழுது போகட்டும்! | Entry #29126 — Discuss
|
தொடக்கம் வருடங்களுக்கு முன்பு, அனைத்தும் நொடியில் நடந்தது, இச் சிறுவன் ஓர் மனிதன் ஆனேன்: சட்டென என் வாழ்க்கைத் துவங்கியது! வையகம் விரிந்தது என் முன்—அப்படி குதிரைகளுடன் நின்றிருந்தான் அந்த உழவன் முதல் மலை முகட்டில் வியர்வையுடன், ஆறோடும் மண்ணை விட்ட பிறகு கீழே பள்ளதாக்கில் உழுதான், உழுவதற்கு ஒரு மலைப் பகுதியை காண்கிறான், வறண்ட பாறை மழுங்கினால் மதிய உணவு, காற்றில் இடி முழக்கம், தலைக்கு மேலே உச்சியில் கருமை,வெறுமை காத்திருக்கிறான் —துணிவிருந்தால் அவன் உழுது பார்க்கட்டும்! | Entry #30311 — Discuss
|
தொடக்கம் ஆண்டுகள் முன்பு, ஒரு கணத்திலே அனைத்தும் (நடந்தன), சிறுவனாய் இருந்த நான் மனிதனானேன்: திடீரென என் வாழ்வு தொடங்கியது! நான் என் முன்னுள்ள உலகைக் கண்டேன் - அதிற் தன் குதிரையுடன் நிற்கும் உழவனைக் கண்டேன் அவன் முதற் குன்றின் புருவத்தில் வியர்வை அரும்ப நிற்கிறான், கீழுள்ள பள்ளத்தாக்கின் கரடான பாதையிலே ஆற்றுநிலங்களைக் கடந்து, உழுவதற்கான மலைப்பகுதியைப் பார்க்கிறான், அவனது பங்கைச் சிதைக்க வறள் பாறையும், காற்றில் அதிரும் இடியும், அவன் தலை மேற் கரிய சிகரமும் உள்ளன, எதுவும் செய்யாமல், இப்போது காத்திருக்கிறான், — அவனக்குத் துணிவிருந்தால் அதை உழட்டும்! | Entry #30505 — Discuss
|